Friday, April 4, 2014

ஒரே ஓர் சொல்!


வண்ண வண்ண கோபிகளுடன்
எண்ணம் போல உலா வரும்
என் நீல வண்ண கண்ணா....
மாயகலையின் மன்னா!

என் எண்ணங்களின் கதிர் வாங்கி
வண்ணங்களை வாரி இறைக்கும்
நிர்மல் நீர் குமிழே என் அழகிய
ஓர் சொல் "ராதே"!
KRSHI!

Friday, March 14, 2014

கல்மன மாயன்!


முழுமதியின் உறைவிடமே
கள்ளன் என்ற பெயர் உண்டு
உள்ளம் கள்ளம் இல்லையடி!

என் நேயத்தின் முழு உருவே
மன காயம் தந்த உனக்கு
மாயன் என்றும் நாமமுண்டு!
KRSHI!

Friday, January 10, 2014

மாதவனின் அல்லி!


அல்லி மலர் முகத்தாளே!
கிள்ளி வைத்த இதழ் போல
கண்களிலே தேக்கி வைத்தாய்
காத்திருப்பின் காலங்களை;

கார்முகில் வண்ணனே!
விழிகளாலே வீழ்த்தி விட்டு
வெண் முகிலாய் கரைந்திடுவாய்
காத்திருப்பின் காலங்கள்
கதிரொளி படா அல்லி போல!
KRSHI!