Friday, January 10, 2014

மாதவனின் அல்லி!


அல்லி மலர் முகத்தாளே!
கிள்ளி வைத்த இதழ் போல
கண்களிலே தேக்கி வைத்தாய்
காத்திருப்பின் காலங்களை;

கார்முகில் வண்ணனே!
விழிகளாலே வீழ்த்தி விட்டு
வெண் முகிலாய் கரைந்திடுவாய்
காத்திருப்பின் காலங்கள்
கதிரொளி படா அல்லி போல!
KRSHI!