Friday, December 30, 2016

என்னவனே!


குழலின் ஸ்வரங்கள்
ராதே... ராதே.......
குவளை முகத்தாள்
ராதே... ராதே.......
சகியின் முழுமை
ராதே... ராதே.......
என்னுள் பொருளே
ராதே... ராதே.......

கமல விழியோன்
கண்ணா..... கண்ணா.....
இசையின் நிலையே
கண்ணா..... கண்ணா.....
முற்றிலும் நேசம்
கண்ணா..... கண்ணா.....
என்னுள் முழுமை
கண்ணா..... கண்ணா.....
KRSHI!

வேள்வியின் கேள்வி நீ!



குழலையே கொடுத்து விட்டேன்
பூங்கோதையை என் செய்வேன்?

விடை தெரிந்தும் ஏனோ
வினாவிலே விளையாடுகிறாய்!

கயல்விழியாள் மொழி அறிவேன்
காலத்தின் நிலை புரியேன்

ஞாலத்தின் அகப்பொருளே
காலத்தை வெல்பவன் நீ

காலத்தை வென்றாலும்
புரியா கவிதையாய் நின்றாய் நீ

காதலை புரிய வைத்தாய்
என்கவிதைக்கு கருத்தானாய்

காதல் என்பது வேள்வியடி
அவ் வேள்வியின் வடிவமே நீயடி

மோகப் பிரியோனே
யாகத்துக்கு உரியவனே

மாயத்திலும் மெய்யாகி
நேயத்தின் உருவானாய்

வாழ்வுக்கு நிலை ஏது
உன் வடிவிற்கு நிகரேது?

ஊழிக்காலம் பல முடிந்தாலும்
எவ்வேள்வியின் வடிவமும் நாமே!
KRSHI!

Thursday, December 15, 2016

வெற்றி கொடி



கண்மணியே உன் நேயம்
கற்றதெல்லாம் மாயமாக்கும்

என்னவனே உன் கோலம்
காண்பதெல்லாம் நேசமாக்கும்

என்னை கொடுத்து விட்டேன்
எடுத்து கொண்டு செல்லடி

சிறை பிடித்து கொண்டேன்
விடுப்பே இல்லையடா

முற்றும் இலா என் பற்றில்
இச் செம்பட்டே உன் பற்று

தொற்றி விட்ட இவ் உறவில்
வெற்றி கொடிதான் இச்செம்பட்டு
KRSHI!