Thursday, November 28, 2013

நியாயமான அநியாயம்!


அடே கிருஷ்ணா!
ஆரணங்கு ராதையை
கண்ணைசைவில் உருக்கி
இன்னிசையால் மயக்கி
இயல்பாய் விலகியவனே
இரக்கமற்ற உன் செயலையும்
அன்பிற்கு ஆதாரமாய்
அனுதினமும் நியாயமாய்
அகிலமும் போற்றுகின்றதே!
KRSHI!

Thursday, November 7, 2013

எட்டு வண்ண கோபியரும்! எட்டா வண்ணம் என்னவளும்!


மது கொடுத்து மதி மயக்கி
மதுசூதனன் மனம் கவர

செவி சிவக்க கவி பாடி
கேசவனின் குழல் பறிக்க

மாலையிட்டு மணம் முடித்து
மாதவனின் மெய் கவர

நாதங்கள் பல இசைத்து
நந்த கோபனுடன் நர்த்தனம் ஆட


நறுஞ்சுவைகள் பரிசளித்து
நிரஞ்சனை வசமாக்க

செந்தூர அலங்காரம் சீரளித்து
ஸ்ரீநிவாசனை கமலக்கரம் பற்ற

வண்ண வண்ண எண்ணம்
கொண்டு வந்திருக்கும் கோபியரே

உங்கள் கண்ணசைவில்
கொள்ளை போக இவன்
மழலை கண்ணன் இல்லையடீ

எட்டு வண்ண கோபியரே
எட்ட நின்று பாருங்கடீ
என்னவனின் கண்ணசைவு
என்னில் மட்டும் நிற்குமடீ
KRSHI!

உயிரின் அர்ப்பணம்!



என் உயிரே! என் ராதே!
முரளியை அர்ப்பித்து 
உயிர் பிரிந்த உடலாக 
உனை பிரிகிறேன்!

பார்த்திபா! என் பரந்தாமா!
பயிர் விளையா நிலமாக
பற்றற்று போவேனே
நம் பிரிவில்!

கனிமொழியே! என் காவியமே!
அறியாமை இளமை முடிந்தது
இயலாத நிலைமை புரிந்தது
கடமை என்ற கட்டுக்குள்
காலம் என்னை பிணைத்தது

கார்வண்ணனே!என் கண்ணனே!
நிர்பந்தம் அற்ற நேசமடா
நிலையான  உடமை நீயடா
சொந்தம் என்ற பெட்டகத்தை
புதைத்து விட்டேன் பாரடா

காத்திருப்பேன் காலமாக 
ஜனம்ஜனனமும் உனை பெற
வரம் தா என் பரமாத்மா
கணமேனும் பிரியாத!!
KRSHI!