Wednesday, January 6, 2016

மென்மையாளே!





தாமரை கண்ணா
தள்ளி விடாதேடா
தரையில் வீழ்வேன்;

விலகாமல் கலந்தவளே
முகிலினும் மென்மையாளே
ஊஞ்சலின் வேகத்தில்
வழுக்கும் உன் தேகம்;
தள்ளி நான் விடவில்லை
உன்னை தாங்கவோ
கணமும் தயக்கமில்லை!
KRSHI!

என் நாதமே!


வான வண்ணனே;
மாயக்கண்ணனே
தங்கிய எண்ணங்களை
தாங்கியே நின்றேன்
முக்காலமும் உன்னை
மொழிந்தே மகிழ்ந்தேன்
என் வழி காணாமல்
ஏன் விழி மூடி நின்றாய்?! 

அல்லி விழியாளே;
சொல்லில் இனியாளே
என்னுள் பதிந்தவளே
எழும் என்குழலிசை
முழுவதும் நீயடி
கண்ணின் மணியே
கண்ணுள் காணும்
காட்சிகள் முழுவதும்
ராதே ராதே நீ தானே.....
KRSHI!

அழகிய பூ!


காதில் அல்லாமல்
கூந்தலில் சூடடா பூவை
என்னையே சூடிய
அழகிய ஏந்திழையாளே 
வேணுகானம் சூடிய காதில்
நாணும் பனிமலர் ஏனடி

வெண்ணை கள்வனடி
அது கள்ளம் இல்லையடி
எப்பூவையும் சுற்றாமல்
இப்பாவையை சுற்றும்
வண்ணப்பூச்சியை கேளடி
கன்னம் சிவந்த ராதே!!
 KRSHI!

என் இனியவளே!


மாயன் என்பதை உணர்த்தி விட்டாய்
கோபியருயுடன் மட்டுமே மெய் காட்சி தந்தாய்
சூட்சுமன் என்றே நீ பேர் எடுத்தாய்
காட்சியிலும் மாய வண்ணம் தெளித்தாய்

என்னை உன்னவனாக பாடுவதால்
பேதையே நீதான் என் ராதையடி
காட்சி பிழையில் வாழ்பவளே
சூட்சுமமே ஜென்ம வண்ணமடி!
KRSHI!