Thursday, October 31, 2013

விரல் நேசம்!!



என் வானின் கார்மேகனனே!
வானில் தெரியும் மேகமெல்லாம்
நிலத்தில் பெய்து குளிர்வதில்லை
காற்றடித்த திசை திரும்பி
கானலாக பொய்த்து போகும்

விரல் பிடித்து நடை பயின்று
உன் வழியை தான் தொடர்ந்து
விரல் நேசம் பெரும் வரமாக
வேண்டுகிறேன் கோபாலனே!
KRSHI!

கானம் தேடிய வானம் பாடி!


மாதவா! 
வானம் பாடியான என்னை
மௌனம் நாட விட்டாய்!
கானம் தேடி பாட வந்தேன்
ஞானம் நாடி நாளும் நின்றேன்!

ஊனமான கரங்களுடன்
கை கோர்க்க கனவு கண்டேன்
ஆழ்மனதில் ஓர் வலி,
அடைத்து கொண்டு வருவதேன்?

நினைவுகள் நிற்கவில்லை
மறக்கவில்லை !
மரத்து போக அவை
மனித ஜென்முமில்லை!

புன்னகை சென்றது,
புதைகுழியில்!
காலங்கள் சொல்கிறது
சோகங்கள் சுமையென!
KRSHI!

Monday, October 21, 2013

கண் விழிடா என் கண்ணா!!



கானங்கள் பாடி 
கண் உறங்கி விட்டாய் ! 
கவிதைகள் கூறி 
என் உறக்கம் கலைத்தாய்! 
எண்ணங்கள் இன்னும் 
நீங்காவண்ணகளாக! 
என்றுதான் கண் விழிப்பாய் 
கண்ணா எனக்காக! 
KRSHI!

வருத்தமில்லை!!


எங்கேடா நீ???
நெஞ்சில் நிறைந்தவனே!
வண்ணங்களை தெளித்த
நீல வண்ணனே!
உன் நினைவால்
உள்ளத்தில் அனுதினம்
வண்ண எண்ணம்!
தனை மறந்து கோபியுடன்
கோலகாலமாக விளையாடுபவனே!
வருத்தமில்லை எனக்கு
நீ வரவில்லை என்றாலும்!
காலமாக கத்திருப்பேன்!
என் விழி நீரை ஊடுருவி
உன் கடைகண் கதிரால்
வானவில் காணும் வரை
KRSHI!

ரகசியம்!



உனக்கு மட்டுமே
ஒரு ரகசியம்!
அன்பின் அன்பவள்
பாசத்தின் வாசமவள்
பிரிவிற்கு பயந்தவள்
நாணலாக நாணியவள்
ஊமைக்கு உவமையவள்
என்னுள் உண்மையவள்
என் இனிய ரகசியமவள்
அவளே என்னவள்
KRSHI!

உனக்கே உனக்கடீ!!




கிருஷ்ணா!
நீ கமலகண்ணனா?
கமலத்தை மறைத்த கள்வனா?
கையில் தந்தாய் ஒரு கமலம்
மறைத்தாய் ஏன் மற்ற இரு கமலம்?
தாமரை இலை சொன்னதடா
கோபியர்க்கான உன் திருட்டை...

என் மன கமலமே!
நான் கமல கண்ணனடீ
என் கண்ணுள் நீயே நீயடீ
கோபியர் யாவரும் மாயமடீ
இந்த கோமகன்
உனக்கே உனக்கடீ!!!
KRSHI!

எனை பாடு!!


முகுந்தா!!
முதலில் என்னை
முத்தமிழில் பாடு!
உன் முரளியை
தருகிறேன் பிற்பாடு!

அடியே ராதே!
வம்பனிடம் வம்பா?
மதுர கானம்
இல்லா என் மாது
சுவாசம் தான்
விடுவாளா என்னோடு???

மாயக்கண்ணனே!
தினம் தினம்
உன் மாயம்தான்
நான் மறைந்ததும்
நீ கோபியருடந்தான்!

என்னை முழுதும்
நிறைந்த முச்சுடரே!
கணம் கணம்
நான் படும் கானம்
உன் நினைவின்
கோணம் தானடீ!
KRSHI!

அலங்காரம்!


நெஞ்சில் நிறைந்த
என் ராதையே!
அணிகலங்கள் ஏனடீ?
மணிமாலை ஏனடீ?
நெற்றியில் இடுவேன்
துளி செந்தூரம்!
நிம்மதி அடையும்
என் ஜென்மம்!
KRSHI!

அலங்கரித்த தங்க மலரே!!



தொடுத்த பூக்கள் எல்லாம் பாடுதடி
உன் அழகு நடை பார்த்து!
அலங்கரித்த குடமும் அசைந்து நாணுதடி
உன் குமுத முகம் சேர்த்து!!!
அலங்கரித்த அல்லி மலரே!
மனம் பூரிக்கும் செஞ்சுடரே!
அருகில் வந்து அமரடி
பூ அலங்கரித்து போதுமடீ
 KRSHI!

மாயவனுக்கே மாயம்!!


மன்னித்து விடடா
என் மாயவனே!
சொன்னதை செய்வேன்
மன மோகனனே!
மறைத்து வைத்த முரளி
மடியிலே இருக்குதடா!!
திரும்பி பாரடா விரும்புதலை
தளிர் கரம் ஏந்தி
நின் முகம் தாங்குபவளை!!!
KRSHI!

எல்லாம் கிருஷ்ணனா??


அடி அழகிய ராதே!!
அளித்தேன் உனக்கே
மற்ற இரு கமலமும்!
நான் உனக்கே உனக்கடீ
கோபியருடன் விளையாடுபவன்
எல்லாம் கிருஷ்ணனா??
 KRSHI!

என் பசுஞ்சோலையே!!



கிருஷ்ணா!முகுந்தா!
தங்க மலரை
தான் எடுத்தேன்
தாங்கும் மலரையும்
அதில் இணைத்தேன்

துணைக்கு நினைவு
பொங்கும் நீளமான
நீலம் எடுத்து
மாலை தொடுத்தேன்

என் மாயவனே!!
நீ எனை மறந்தால்
நான் என்றும் மறைந்தால்
உன் மார்பில் நான்
தொடுத்த என் மணமாலை
மட்டும் தொட்டு படர....

என்னை உன்னுள்
மறைத்த அழகிய மாதே!
அடி என் ராதே!
எனை மறந்தாலும்
நான் மறைந்தாலும்
உன்னையே மார்பில் ஏற்பேன்
மண மாலையாக!
என் மனதில் வளர்ப்பேன்
மணக்கும் பசுஞ்சோலையாக!
KRSHI!

அடங்குதலா?


டேய் கண்ணா!
அடங்கமாட்டாயா?
குடத்தை தான் உடைத்தாய்
குமரிகள் துயிலையும்
ஏனடா மறைத்தாய்???
KRSHI!

என் பற்று!


தங்கும் மஞ்சளை போர்த்தி
எனை தாங்கிடும் தங்கமே!!!
தென்றலினும் மெல்லியவளே
தேவதையின் பொன் மகளே!
இந்த வெண் பட்டு என்றும் என் பற்று!

KRSHI!

குழலோசை மொழியில், விழி ஆசை உரையில்!!


கண்ணால் பேசி கொண்டது போதும்!
குழலை வாசிடா கோவர்த்தணனே!
கோகுலத்தின் நாயகியே!
கோமகனின் மோகினியே!
வலையை வீசும் விழியால்
சொல்லடி உன்  ஸ்வரத்தை!!!
KRSHI!

ஒரே ஓர் சொல்!


கடமைக்காக எனை பிரிந்த
கார் மேக கண்ணனே!
வானமாக பூமியாக!!
பகலில் பார்த்து
இரவில் காத்து
வான் நீலமாக நீ!
பசும் பூமியாக நான்!
நிழலில் இணைந்து
நிஜத்தில் பிரிந்து

அன்று தோள் கொடுத்த மாயனே!
சுற்றும் இந்த உலகிற்கு
இன்று சொல்லிவிடு ஓர் வார்த்தை
"இந்நொடிகள் கல்லாக கடவது"
என்நொடியும் நமக்காக உயிர்ப்பது!
KRSHI!

புண்ணீயமே!


உன் விரலசைவில்
என் குழலோசை
பூர்ண புண்ணியமானதடி!!!
உன்னில் பாதி நான் நின்ற இக்காட்சி
என் ஜென்மாந்திர புண்ணியமடா!
KRSHI!

இணைபிரியா சந்திப்பு!




கண்ணா!  இது என்ன?
மதுராவில் இறுதியாக
விடை பெற்ற இணைபிரியா,
பிரிந்த உன் இனியவளை
இதய சுவற்றில் ஏற்றிய
ராதையின் புகைபடமா?
KRSHI!

வேண்டாம் பரிசு!


கிருஷ்ணா!
முதலில் பாடு
உன் குழல்பாட்டு
பிறகு போர்த்து
பட்டாடை பரிசு!
அடி ராதே!
பனி விழுகுதடி
உன் பளிங்கு மேனி
நடுங்குதடீ!
KRSHI!

சுருதி சேரும்!!


கண்ணனின் கானம் பெற
கரைக்கே வந்த கமலம்
அவன் கமல பாதங்களை
தழுவி, நழுவி மலர!
வண்ண மயிலின் வினா
"இன்னும் இறகுகள் தரவா
சிங்கார நடனம் ஆடி?"
கொஞ்ச நேரம் பொறும்
என் ராதை வரும் நேரம்
பின்னும் சுருதி சேரும்!!
KRSHI!

மீளா நீலம்!

அழகிய ராதே!
உன்னை இப்படியா
நினைவில் கொள்வேன்
மேனி முழுதும்
மீளா நீலமாக??!!
KRSHI!

"கண்ணனின்" மூச்சு!


கண்ணனின் மூச்சே!
என்னிடம் கண்ணா மூச்சா?
கண்களில் நிறைந்த
என் கண்ணின் மணியே!
கானம் பாடி கவர்ந்திழுப்பேன்
நொடியில் கண் முன் வந்து நிற்பாய்
என் தோளில் துவண்டு!
KRSHI!

கானமா? கவிதையா?


நீ கண்ணுக்குள் உறைந்து விட்ட
என் கவிதையடி!
உன் பார்வை ஏழாம் வண்ணம்
நான் ஆனேன் காதல் வண்ணம்!
நீ கண் எதிரில் மயக்கும்
மாய கள்வனடா!
உன் நாதம் உலகை மறைக்கும்
நான் ஆனேன் வியக்கும் வண்ணம்!
KRSHI!

வினா? விடை!

கயல் விழியாலே!
விடை தெரியா வினாக்களை
கொடையாக கொண்டாயே!!
கார்மேக மோகனனே!
விடை தெரிந்தும்
மௌன வேள்விகளை
கேள்வியாக தருபவனே!!!!
KRSHI!

வானவில்!



என்னை சுற்றி
உன் ஒலியும்,ஒளியும்!
உன்னால் கண்ணை சுற்றி
வலியும் ,விழிநீரும்!

KRSHI!

என்னவன்!


மாறாமல் கரம் பிடித்து
சோராமல் உடன் அழைத்து
வீழாமல் தோள் தாங்கி
வாடாமல் பலம் தருபவன்..............
KRSHI!

நின்று ரசித்தது போதுமடா! என்று அணிவிப்பாய் வரமாலை?



என் கண்ணான கண்ணனே!
ஏனடா! என் மன மன்னனே!
என் மாலையும் கொண்டாய்
என் மனதையும் வென்றாய்
என்று எனையும் கொள்வாய்??

என் கண்ணின் மணியே!
என் காதலின் உவமையே!
வரமாலை ஏனடி கொள்வாய்?
வரமாக நானே வந்தேன்
மாறாத என் மன மோகனமே!

கன்னியரின் கள்வனே!
என்னை வென்ற குறும்பனே!
கானம் பாடி கொள்கிறாய்
மாயம் செய்து வெல்கிறாய்
ஏனடா! நீல வண்ணனே!
மணமாலை மறுப்பதேன்?
மாலையாக மட்டும் துடிப்பதேன்?

எண்ணமே என் வண்ணமாக
ஏனடி! என் மன ஏக்கமே!
உன் செந்தூர நாணம் மேலும்
சிங்காரமாக சிரிக்க கண்டு
உன்னில் மாலையாக துடிக்கிறேன்
என் சோலையாக்கி ரசிக்கின்றேன்!
KRSHI!

எல்லாம் நீயே!


என் அழகிய ராதே!
கானம் படிக்கிறாயா?
கண்ணனை படிக்கிறாயா?
காதலை படைத்த
கார்மேக கண்ணா!
படைத்ததும் நீயே
எனை மனதில்
அடைத்ததும் நீயே
படிப்பதும் நீயே
எனை பாடாய்
படுத்துவதும் நீயே
பாடுவதும் நீயே
தேடி நாடுவதும் நீயே
உருகுவதும் நீயே
எனை மெழுகாய்
உறுக்கியதும் நீயே
மணந்ததும் நீயே
எனை தென்றலாய்
பரவியதும் நீயே

அடி கோதையே!
ஒரு வினாவிற்கு
இத்தனை விடைகளா?
கோகுல கிருஷ்ணா!
முடிந்துவிட்ட உன் கேள்விக்கு
நான் முடிவற்ற வேள்வியடா!!!!!
KRSHI!

கொலுசின் கானம்!


மாதவா! என் மதனா!
உன் மதுர கானத்தை
கவனம் சிதறவைக்கிறதே
கால் கொலுசொலி!
இந்த நீல மயிலை
கொஞ்சம் அமர சொல்!

அழகிய என் பெண் மயிலே!
அன்பான கோதையே!
உன் கொலுசின் நாதம் தான்
என் கானத்தின் சந்தமடி
அந்நீல மயிலை பாரடி
உன் பளிங்கு பாதத்தில்
தன் நடனத்தை காணுதடி!
KRSHI!

மதி மறந்த முழுமதி!

தினம் அனுதினம்
சிந்தையில் நினைவுண்டு
வெண்ணெய் நிரப்பிய
பொன் குடம் ஏந்தி செல்ல
கண்ணனிடம்!
கணம் நொடிக்கணம்
மாயகண்ணன் கானத்தில்
மதி மறந்த முழுமதி
செவி சிவக்க சிலையாகி
புவி மறந்த புலனாகி
மாலையே மங்கினாலும்
மதி வந்து தங்கினாலும்
நீர் நிரப்ப நினைவிழந்து
காலிகுடம் கையில் ஏந்தி
நித்திரையில் நடைபயிலும்
சித்திரை மாத நிலவானாள்!!!!
KRSHI!

பாய்மர கப்பல்!


என் அழகிய ராதே!
சாய்ந்து தெளிவதும்
உன் தோள் என்ற
தூளியில் தானே
என் கண்மணியே!
கடமைக்காக பிரிந்து
எதிர் திசை துடுப்பானேன்
உன் இனிய நினைவால்
இழுத்து செல்கிறாய்
காற்றடித்த திசை செல்லும்
பாய்மர கப்பலாக!
KRSHI!

முத்தமிட்டு முத்தாடும் என் பித்தே!

என் உதயத்தின்
முழு ஒளியே! வீழாமல்
உன் மடியில் தாங்கி
ஸ்வரம் தவறாமல்
எனை மீட்டு!

என்னவனே! என்னுள்
அடங்கியவனே!
உயிருடன் உடலாக
உனை தொடர்வேன்
கரங்களில் ஏந்தி 
ஆனந்த ராகம் நீ பாடு!

இதயத்தில் இதமாக
இணைந்தவனே!
துடிக்கும் நெஞ்சில்
முகம் பதித்து
தூங்கும் சேயாய் நீ மாறு!

இக்காலம் முக்காலமும்!
எத்திசையும் உன் நேசம்
அதனுள் ஏங்கி தவிக்கும்
நம் நினைவின் நாதம்!
KRSHI!

என் ராதே!என் கிருஷ்ணா!


ராதே!
நெஞ்சுக்குள் நீயடி
நிறங்களாய் சிரித்தபடி!
ஹரே கிருஷ்ணா!
நிறங்களில் நீயடா
நீங்குவேனா விலகினாலும்!

ராதே!
வஞ்சிக்கொடி நீயடி!
என் வசந்தமாய் வந்தாயடி!
ஹரே கிருஷ்ணா!
தென்றலே நீயடா
சுகந்த மணம் தந்தாயடா!

ராதே!
பஞ்சு பொதி நீயடி!
கொஞ்சும் அஞ்சுகம் தானடி!
ஹரே கிருஷ்ணா
குரல் தந்தவன் நீயடா!
குழல் கானத்தை விடவா இனிமையடா?

ராதே!
தாமரை முகத்தால் நீயடி!
காதல் கொண்டேன் நிஜமடி!
ஹரே கிருஷ்ணா!
கமல கண்ணனே நீயடா!
உன் நெஞ்சம் தான்
என் மஞ்சமடா!
KRSHI!

தாளம், ராகம் தந்தாய்! அழகிய சங்கீதம் தந்தேன்!

ஆகாய கங்கையில்
நீதான் அங்கு நிலவு!
விண்மீன் உந்தன் சிரிப்பு
கண்டேன் உன்னை,
தந்தேன் என்னை,
கண்ணனே வாழ்கவே!
கண்ணனே வாழ்கவே!

குங்கும தேரில்
நான் தேடும் புலவன்
செந்தமிழ் பாடும் கவிஞன்!
தாளம் தந்து ராகம் தந்து!
நாடினான் என்னிடம்,
பாடினான் சங்கமம்!

நினைவின் எண்ணம்.... ஹே ஹே ஹே ஹே
கூடும் நேரம்.....ஓஓஒஒ
நினைவின் எண்ணம்.... ஹே ஹே ஹே ஹே
கூடும் நேரம்.....ஹா ஹா ஹா ஹா ....
சோலை குயில்கள் பாடும் சங்கீதம்!

என் கண்ணனே.....
உன் ராதை நான்....
தொடர்வேன் நிழலாக
மறவேன் நிஜமாக!
என் நெஞ்சில் பெண் பாவை
எந்நாளில் படர்வாளோ?

வெண்கல சிரிப்பில்
வீழ்ந்தேன் உந்தன் மடியில்
படர்ந்தேன் உந்தன் மார்பில்!
சங்கீத நேரம்
தென்றலும் வீசும்
சந்தங்கள் பெருகுதே
சந்தங்கள் பெருகுதே

காலம் யாவும் ஹே ஹே ஹே ஹே
கவிதை பாடும் ஓஓஒஒ
காலம் யாவும் ஹே ஹே ஹே ஹே
கவிதை பாடும் ஓஓஒஒ

ராதை நெஞ்சில்
கண்ணா நீ வேணும்!
நான் பாடுவேன் சுக ராகமே..
அருகினில் விளையாடு!
வானவில் நிறத்தோடு!
கண்ணா நீ போகாதே!
தாங்காதே என் உள்ளம் ..!!!!!!
KRSHI!

"என் செய்வேனடி??"

கண்ணா!
புல்லாங்குழலில் சோகம் ஏனடா ?
கண்மணியே! என் கயல் விழியே!
கண்களில் காதலை வைத்தவளே!
கடமை அழைக்கிறதே!
காதலை மறப்பேனா?

என் நினைவை முழுதும்
உருவில் வைத்த நீலக்கண்ணனே!
கவலை வேண்டாம்;
கலியுகமே முடிந்தாலும்
அதே காதலுடனே காத்திருப்பேன்!
KRSHI!

"கார்மேக வண்ணன்!"




கண்ணனை பாட
கன்னியர் பலர் உண்டு!
மன்னனை பாட
மனம் ஒன்றுதானே உண்டு!
சூட்சுமங்கள் பல கொண்டான்
சுற்றும் பூமி என் வாயில் என்றான்!
வெண்ணை கள்ளன் என பெயரும் கொண்டான்!
வித விதமாக காரணங்கள் சொன்னான்! 
கோபியருடன் லீலை கொண்டான்!
திரு நாமங்களை பல பெற்று நின்றான்!
குழல் வித்தையில் பலரை வென்றான்!
குமரி ராதையையும் கொள்ளை கொண்டான் !
சொன்ன சொல்லில் மாயம் என்றான் ! 
வெள்ளை உள்ளம் காதல் என்றான்! 
கடமைதான் முதலில் என்றான்! 
ராதைக்கு பின்தான் கிருஷ்ணன் என்றான்! 
மாயங்களை விதைத்து சென்றான்! 
நேயங்களே இல்லை என்றான் ! 
சாயங்களே புவி மைந்தர்கள் என்றான்! 
காயங்கள் அதன் படிமம் என்றான்!
உருவம் அருவம் ஏதும் இல்லை!
எல்லாம் உன் பாவம் என்றான்! 
கண்ணனை பாட கன்னியர் பல உண்டு
மன்னனை பாட மனம் ஒன்றுதானே உண்டு!!!
 KRSHI!

”மான்கள்!”




ராதே!!!!
என்அருகில் வாடி என்றால்
ஏந்துகின்றாய் கைகளை எங்கோ? 

கண்ணா!!!!
தோள்களில் சாய்ந்து
நாணம் கொண்டேன்!
வந்த மான்களை கண்டு
மிரண்டு விட்டேன்!

அடி ராதே!!!!
மான்கள் ஓடி வந்ததே
மான் விழியாளை காணத்தான்!

கண்ணா!!!
உன் கான மழையில் நனையவே!
மான்கள் ஓடி வந்தது!

அடி ராதே!!!
என் மான் விழியாள் நீயடி!
என் நிலையையும் கொஞ்சம் பாரடி!

கண்ணா!!!
இளகி விடுடா கைகளை,
அதற்கு இலையை கொடுத்து விடுகிறேன்!
 KRSHI!

"மகிழ்பவள்!"




ஏனடீ ராதே!
துவக்கியவள் நீ !
மயக்கியவள் நீ
மறைவது சரியா?

போடா கண்ணா!
நிலவும் நானும் ஒன்றா?
மாய பேச்சு போதும்!
மயங்கமாட்டேன் நானும்

கண்ணே ராதே!
வானமும் நானும் ஒன்றா?
தடுக்கும் கைகளை விலக்கு
உன் தளிர் முகத்தை காட்டு!
KRSHI!

என்பேன் என்பான்!!!!!!.....

முழுமதியே  என்றான்
சுற்றுவதால்,
பூமியே என்றேன்!

உயிரே என்றான்
உள்ளத்தின்
கடவுளே என்றேன்!

வானவில் என்றான்
ஊடுருவும்
ஒளிக்கீற்றே என்றேன்!

வசந்தமே என்றான்
வீசும் இனிமை
தென்றலே என்றேன்!

பனிமலரே என்றான்
கமழும் சுகமான
நறுமணமே என்றேன்!


தேன் நீயே என்றான்
பருகத்துடிக்கும்
தேனீயே என்றேன்!

தளிர்கொடியே என்றான்!
தாங்கும்
கொழுக் கொம்பே என்றேன்!

கண்ணே என்றான்
காக்கும் கண்ணின்
இமையே என்றேன்!

உருவே என்றான்
எனை தொடரும்
அருவே என்றேன்!

நினைவே என்றான்
நீங்காதா நீல
வண்ணமே என்றேன்!

கவியே என்றான்
தமிழ் சொல்லின்
சுவையே என்றேன்!

நீரே என்றான்
நிலம் தொடும்
மழையே என்றேன்!

நிலமே என்றான்
விளைய உதவும்
உரமே என்றேன்!

உதயமே என்றான்
வாசலில் வரவேற்கும்
சுப்ரபாதமே என்றேன்!

உலகமே என்றான்
மாறாத மறையாத
இயற்கையே என்றேன்!

சந்தமே என்றான்
என் கவிதையின்
சங்கீதமே என்றேன்!

இன்னும் என்பேன் என்பான்...
KRSHI!

உன் பூஞ்சோலை!!


அழகிய ராதே!
நீளமாக நித்தம் தொடரும்
உன் நினைவால் தாண்டி
அவன் நீல வண்ணன்!
உன் காதலை மட்டுமே
முழுதும் கொண்ட
கார்மேக வண்ணன்!
தோள்களில் சாய்ந்து
தோழியானாய்!
உள்ளத்தில் படர்ந்து
அவனில் பாதியானாய்!
பாமாலைகள் மணக்கும்
இப் பூஞ்சோலை
அவன் கொடுத்த வரமடி!
உன் ஆரமாக அவன்
அவன் வரமாக நீ...
KRSHI!

"என்னவனின் அவள்!"




கண்ணா!
சிரிக்க வைத்தாய்
சிவக்க வைத்தாய்
புரிய வைத்தாய்
புதிர் உடைத்தாய்

ராதே!
நித்தம்,நித்தம் 
நினைக்க வைத்தாய்
நின்று நிதானித்து
கொஞ்ச வைத்தாய்

கண்ணா!
சுமந்து வந்தாய்
நிமிர்ந்து நின்றாய்
மாலையாய் தோளிலும்
மணமாய் நெஞ்சிலும்,

என்னவனே!
நீர்குவளை மூழ்குதடா
நித்தம் தாமதமாகுதடா
வெண் மதியும் வந்ததடா
பிரியா விடை வேண்டுமடா!

ராதே!
நளினமாய் வந்தாய்
நாணி கோணி நின்றாய்
என்னவளே! பொன்மகளே!
பிரியாமல் வந்துவிடு
குறையாமல் தந்துவிடு
விட்டு விடு குவளையை
என் மதியும் மூழ்கியது
KRSHI!

கயல்விழியாள்!!!!




என் தோளில் சாய்ந்த
மாலையே!
இனி வாழ்வில் என்ன
தேவையே!!!
மனதில் ஊஞ்சளாடும்
மன்னனே!
இனி தேவை உன்னில்
பாதியே!!!
அடி என் அழகிய ராதே!
காதல் என்ற சொல்
உன் கயல்விழியால் தான்
வந்ததா?
மனமோகன கண்ணா!!!!
மோகம் என்ற சொல்
உன் கமல விழியில் தான்
தெரிந்ததே!
KRSHI!