நெஞ்சுக்குள் நீயடி
நிறங்களாய் சிரித்தபடி!
ஹரே கிருஷ்ணா!
நிறங்களில் நீயடா
நீங்குவேனா விலகினாலும்!
ராதே!
வஞ்சிக்கொடி நீயடி!
என் வசந்தமாய் வந்தாயடி!
ஹரே கிருஷ்ணா!
தென்றலே நீயடா
சுகந்த மணம் தந்தாயடா!
ராதே!
பஞ்சு பொதி நீயடி!
கொஞ்சும் அஞ்சுகம் தானடி!
ஹரே கிருஷ்ணா
குரல் தந்தவன் நீயடா!
குழல் கானத்தை விடவா இனிமையடா?
ராதே!
தாமரை முகத்தால் நீயடி!
காதல் கொண்டேன் நிஜமடி!
ஹரே கிருஷ்ணா!
கமல கண்ணனே நீயடா!
உன் நெஞ்சம் தான்
என் மஞ்சமடா!
KRSHI!
No comments:
Post a Comment